< Back
ஹாக்கி
ஆக்கி புரோ லீக் போட்டி:  அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி
ஹாக்கி

ஆக்கி புரோ லீக் போட்டி: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி

தினத்தந்தி
|
18 Jun 2022 10:26 PM IST

நெதர்லாந்தில் நடந்த ஆக்கி புரோ லீக் முதல் போட்டியில் அர்ஜெண்டினாவை இந்திய மகளிர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.



ரோட்டர்டாம்,



சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடப்பு ஆண்டுக்கான ஆக்கி புரோ லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மகளிர் பிரிவில், உலக தர வரிசையில் 2வது இடம் வகிக்கும் அர்ஜெண்டினா மற்றும் இந்திய ஆக்கி அணி ஆகியவை விளையாடின.

இதில், போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன. இதனால் வெற்றியை முடிவு செய்யும் ஷூட் அவுட் முறைக்கு போட்டி சென்றது.

இதில், இந்திய மகளிர் அணியில் நேஹா மற்றும் சோனிகா ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். முடிவில் ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்