சிறந்த மகளிர் ஆக்கி கோல்கீப்பர் விருது: இந்தியாவின் சவிதா புனியா பெயர் பரிந்துரை
|2021-22 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஆக்கி கோல்கீப்பர் விருதுக்கு சவிதா புனியா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா, 2021-22 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த மகளிர் கோல்கீப்பர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடந்த முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் ஆக்கி போட்டியில் சவிதா புனியா தலைமையிலான இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. காமன்வெல்த் தொடர் முழுவதும் இந்திய அணியை சவிதா சிறப்பாக வழிநடத்தினார்.
குறிப்பாக கோல் கீப்பிங்கில் எதிரணியின் கோல்களை பலமுறை லாவகமாக தடுத்த இவர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில் தான் 2021-22 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் கோல்கீப்பர் விருதுக்கு சவிதா புனியா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த இவர் அந்த விருதை தட்டி சென்றார். இந்த நிலையில் இந்த விருதுக்கு 2-வது முறையாக சவிதா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.