< Back
ஹாக்கி
நடப்பு ஆண்டின் சிறந்த ஆக்கி வீரராக இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் சிங் தேர்வு...!

image courtesy;PTI

ஹாக்கி

நடப்பு ஆண்டின் சிறந்த ஆக்கி வீரராக இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் சிங் தேர்வு...!

தினத்தந்தி
|
20 Dec 2023 11:19 AM IST

சிறந்த பெண் கோல் கீப்பர் விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் சவிதா தேர்வாகி இருக்கிறார்.

லாசானே,

சர்வதேச ஆக்கி சம்மேளனம் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ஆக்கி நிபுணர்கள், தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் நடுகள வீரர் ஹர்திக் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் சிறந்த பெண் கோல் கீப்பர் விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் சவிதா தேர்வாகி இருக்கிறார். அவர் இந்த விருதை தொடர்ந்து 3-வது முறையாக கைப்பற்றுகிறார். ஏற்கனவே 2021, 2022-ம் ஆண்டுகளிலும் இந்த விருதை பெற்று இருந்தார்.

மேலும் செய்திகள்