ஆக்கி இந்தியா தலைவராக முன்னாள் வீரர் திலீப் டிர்க்கி போட்டியின்றி தேர்வு
|திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஆக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஆ க்கி தலைவர் போலாநாத் சிங் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து திலீப் இந்திய ஆக்கியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்து இருந்தார்.
வெற்றி பெற்றதை தொடர்ந்து திலீப் டிர்க்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய ஆக்கி புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வேன்" என தெரிவித்துள்ளார்.
44 வயதான திலீப் டிர்க்கி, 1996, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் ஆக்கி அணிகளில் இடம்பெற்று இருந்தார். 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை வென்ற இந்திய அணியிலும் திலீப் டிர்க்கி இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.