< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்: ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி

image courtesy: Hockey India twitter via ANI

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி

தினத்தந்தி
|
2 Jun 2024 3:28 AM IST

13-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியா 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

லண்டன்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் லண்டனில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியன் ஜெர்மனியை சந்தித்தது. இதில் தொடக்கத்தில் சற்று நேரம் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணியால் அந்த உத்வேகத்தை தொடர முடியவில்லை. அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (16-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (41-வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (44-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். 13-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியா 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி 12 ஆட்டங்களில் ஆடி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜென்டினா அணி 14 ஆடங்களில் ஆடி 26 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்