< Back
ஹாக்கி
எப்.ஐ.எச் புரோ லீக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஹாக்கி

எப்.ஐ.எச் புரோ லீக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

தினத்தந்தி
|
7 Nov 2022 5:14 AM IST

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடக்கிறது.

புவனேஸ்வர்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இதில் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் மல்லுகட்டின.

வழக்கமான நேரத்தில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா 3-1 கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இந்திய கோல் கீப்பர் கிருஷ்ணன் பஹதுர் பதாக், ஷூட்-அவுட்டில் ஸ்பெயினின் 3 முயற்சிகளை சூப்பராக முறியடித்து ஹீரோவாக ஜொலித்தார்.

மேலும் செய்திகள்