< Back
ஹாக்கி
மாவட்ட ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி சாம்பியன்
ஹாக்கி

மாவட்ட ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி சாம்பியன்

தினத்தந்தி
|
8 July 2024 11:51 PM GMT

சென்னை மாவட்ட பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி முதல்முறையாக நடத்தப்பட்டது. இதில் சென்னை மாவட்ட பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி 7-0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். பள்ளியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் செயின்ட் பால்ஸ் அணி வருகிற 20, 21-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு முன்னேறியது.

வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய அதிகாரி ராஜா பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் சென்னை மாவட்ட ஆக்கி சங்க பொருளாளர் அலெக்ஸ், துணைத்தலைவர் லட்சுமி நாராயணன், போட்டி இயக்குனர் அன்னகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்