< Back
ஹாக்கி
ஹாக்கி
சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி இன்று தொடக்கம்
|1 July 2022 3:10 AM IST
சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி இன்று தொடங்குகிறது.
சென்னை,
சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் ஐ.சி.எப்., ஐ.ஓ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி, வருமான வரி உள்பட 15 அணிகள் கலந்து கொள்கின்றன.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் வருமான வரி-இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணிகள் மோதுகின்றன. போட்டியை ஐ.பரந்தாமன் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதய்குமார் தெரிவித்தார்.