< Back
ஹாக்கி
ஹாக்கி
ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; ஓமனை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.!!
|30 Aug 2023 5:24 PM IST
இந்திய அணி 2-வது போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
சலாலா,
அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் 15-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று இந்திய அணி 2-வது போட்டியில் ஓமன் அணியுடன் மோதியது. இதில் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 12-2 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரஹீல் முகமது, ராஜ்பர் பவன் மற்றும் சிங் மனிந்தர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினர்.
இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இன்றிரவு பலபரீட்சை நடத்த உள்ளது.