< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: கோப்பை வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து
ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: கோப்பை வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து

தினத்தந்தி
|
13 Aug 2023 12:28 AM IST

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்!

இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது.

இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன்..!" என்று அதில் அனுராக் தாக்கூர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்