< Back
ஹாக்கி
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி உத்தேச அணி அறிவிப்பு
ஹாக்கி

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி உத்தேச அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
13 Aug 2023 1:57 AM IST

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 27-ந் தேதி சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.

பெங்களூரு,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதன் பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. தென்கொரியா, மலேசியா, ஹாங்காங், சீனா, சிங்கப்பூர் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 27-ந் தேதி சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான 34 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய பெண்கள் அணி பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் இன்று முதல் செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி முகாமுக்கான அணியில் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் இடம் பெறவில்லை. சமீபத்தில் அவர் தேசிய சப்-ஜூனியர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்திய பெண்கள் ஆக்கி உத்தேச அணி வருமாறு:-

சவிதா, ரஜனி எதிமர்பு, பிச்சுதேவி காரிபாம், பன்சாரி சோலங்கி (கோல்கீப்பர்கள்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, அக்ஷதா அபாசோ தேக்லே, ஜோதி சாத்ரி, மஹிமா சவுத்ரி (பின்களம்), நிஷா, சலிமா டெடி, சுஷிலா சானு, ஜோதி, நவ்ஜோத் கவுர், மோனிகா, மரியனா குஜூர், சோனிகா, நேஹா, பல்ஜீத் கவுர், ரீனா கோக்ஹர், வைஷ்ணவி வித்தால் பால்கி, அஜ்மினா குஜூர் (நடுகளம்), லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி, தீபிகா, சங்கீதா குமாரி, மும்தாஜ் கான், சன்லிதா டாப்போ, பியூட்டி டுங்டுங்.

மேலும் செய்திகள்