< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்...!

Image Courtesy: @TheHockeyIndia

ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்...!

தினத்தந்தி
|
7 Aug 2023 8:58 PM IST

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 11-வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் அணி 1 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செயதது.

இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்த்த வேளையில் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் மேலும் ஒரு கோல் அடித்தது. இதையடுத்து சீனா கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிட்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் செய்திகள்