< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

image courtesy: twitter/@TheHockeyIndia

ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

தினத்தந்தி
|
8 Sept 2024 5:59 PM IST

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஹூலுன்பியர்,

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகியது. 17-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் இன்று மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தியா தரப்பில் சுக்ஜீத் சிங், உத்தம் சிங் மற்றும் அபிஷேக் தலா ஒரு கோல் அடித்தனர்.


மேலும் செய்திகள்