< Back
ஹாக்கி
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நாளை தொடக்கம்
|7 Sept 2024 3:59 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நாளை தொடங்க உள்ளது.
ஹூலன்பியர்,
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் நாளை தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.