< Back
ஹாக்கி
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதல்
|13 Sept 2024 10:48 PM IST
இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது
ஹூலுன்பியர்,
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தியது.
இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. இப்போட்டி மதியம் 1.15 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது.