< Back
ஹாக்கி
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா...!
|7 Aug 2023 7:04 PM IST
ஜப்பானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் மலேசியா முன்னேறியது.
சென்னை,
7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மலேசிய அணி ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு மலேசியா முன்னேறி அசத்தியது . 4 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி கண்டு 9 புள்ளிகளுடன் மலேசியா பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.