< Back
ஹாக்கி
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? மலேசியாவுடன் நாளை மோதல்
|10 Sept 2024 7:52 PM IST
இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஹூலுன்பியர்,
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே சீனா மற்றும் ஜப்பான் அணிகளை வீழ்த்தி கம்பீரமாக நடைபோட்டு வருகிறது.
இதனையடுத்து இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நாளை மலேசியாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.