< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி லீக் சுற்றை நிறைவு செய்த இந்தியா

image courtesy: twitter/@TheHockeyIndia

ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி லீக் சுற்றை நிறைவு செய்த இந்தியா

தினத்தந்தி
|
14 Sept 2024 3:26 PM IST

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது.

ஹூலுன்பியர்,

6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் தனது முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்து விட்ட நடப்பு சாம்பியனான இந்திய அணி, கடைசி லீக் ஆட்டத்தில் இன்று. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்கள் அடித்தார்.

மேலும் செய்திகள்