< Back
ஹாக்கி
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் முழு விவரம்
|15 Sept 2024 3:54 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
ஹூலுன்பியர்,
6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் தோல்வியே சந்திக்காமல் முதலிடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் (2வது இடம்), சீனா (3வது இடம்) மற்றும் தென் கொரியா (4வது இடம்) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா - தென் கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக மதியம் 1 மணிக்கு நடைபெறுகின்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா அணிகள் மோதுகின்றன.