< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தொடர்ந்து 4-வது வெற்றி... அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

image courtesy: twitter/@TheHockeyIndia

ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தொடர்ந்து 4-வது வெற்றி... அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

தினத்தந்தி
|
12 Sept 2024 6:12 PM IST

இந்திய அணி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தியது.

ஹூலுன்பியர்,

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முதல் 3 ஆட்டங்களில் முறையே சீனா, ஜப்பான் மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.

இதனையடுத்து இந்தியா தனது 4-வது ஆட்டத்தில் இன்று தென் கொரியா அணியுடன் மோதியது. இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சின் 2 கோல்களும், அரைஜீத் சிங் 1 கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 14-ம் தேதி சந்திக்கிறது.

மேலும் செய்திகள்