ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை காண செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
|ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இன்று இரவு இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.
நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.
நேற்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.