ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி : இந்தியா-மலேசியா அணிகள் நாளை மோதல்
|மலேசியா வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.
சென்னை,
7-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதே போல் பாகிஸ் தான்- தென்கொரியா அணிகள் மோதிய ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இன்னொரு ஆட்டத்தில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.. மலேசியா வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.