< Back
ஹாக்கி
ஹாக்கி
ஓய்வு பெற திட்டமா?-ஸ்ரீஜேஷ் பதில்
|11 Aug 2023 10:09 AM IST
இந்திய ஆக்கி அணியின் மூத்த கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் 2006-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்.
சென்னை,
300 ஆட்டங்களை நெருங்கி இருக்கும் 35 வயதான ஸ்ரீஜேஷ் தனது ஆக்கி வாழ்க்கையில் இறுதி கட்டத்தை எட்டி விட்டார். அவரிடம் ஓய்வு குறித்தும், அடுத்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்ரீஜேஷ் பதிலளிக்கையில், 'இந்த வயதில் அடுத்த 2 ஆண்டுகள் குறித்து என்னிடம் கேட்காமல் இருப்பது நல்லது. தற்போது எல்லாம் அடுத்து வருவது என்ன என்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்பேன். நான் ஒரு நேரத்தில் ஒரு தொடரில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அது முடிந்ததும் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்கிறேன்' என்றார்.