< Back
ஹாக்கி
ஹாக்கி
5 நாடுகள் ஆக்கி: அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி..!
|22 Dec 2023 11:45 AM IST
இந்திய அணி தரப்பில் தீபிகா மற்றும் சங்கீதா குமாரி ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
வலென்சியா,
இந்திய மகளிர் ஆக்கி அணி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 நாடுகள் இடையிலான தொடரில் விளையாடியது. அதன்படி அந்த தொடரில் ஸ்பெயின், ஜெர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன.
இதில் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்துடன் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீபிகா மற்றும் சங்கீதா குமாரி ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கேத்ரின் முல்லன் மட்டுமே 1 கோல் அடித்தார்.