< Back
ஹாக்கி
5 நாடுகள் ஆக்கி: பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி திரில் வெற்றி....!

image courtesy; twitter/@TheHockeyIndia

ஹாக்கி

5 நாடுகள் ஆக்கி: பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி திரில் வெற்றி....!

தினத்தந்தி
|
21 Dec 2023 4:57 PM IST

இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

வலென்சியா,

ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் இடையிலான பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் கலந்துகொண்ட ஆக்கி தொடர் ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இதில் பங்கேற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது முதல் 3 போட்டிகளில் ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்சுடன் நேற்று மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்