< Back
ஹாக்கி
ஹாக்கி
5 நாடுகள் ஆக்கி: பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி தோல்வி...!
|17 Dec 2023 9:23 PM IST
பெண்கள் பிரிவிலும் பெல்ஜியத்திற்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது.
வலென்சியா,
ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் இடையிலான பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் கலந்துகொண்ட ஆக்கி தொடர் ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இதில் பங்கேற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்திய ஆண்கள் தனது 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் 7-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.
இதேபோல் பெண்கள் பிரிவிலும் பெல்ஜியத்திற்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது.