< Back
ஹாக்கி
ஜூனியர் உலககோப்பை ஹாக்கி; 40 நாள் தீவிர பயிற்சி முகாம்
ஹாக்கி

ஜூனியர் உலககோப்பை ஹாக்கி; 40 நாள் 'தீவிர பயிற்சி' முகாம்

தினத்தந்தி
|
22 Jun 2023 1:09 PM IST

ஜூனியர் உலகக் கோப்பை டிசம்பர் 5 முதல் 16 வரை நடைபெறவுள்ளது.

பெங்களூரு,

இந்த ஆண்டு இறுதியில் கோலாலம்பூரில் ஜீனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் 40 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமுக்கு பயிற்சியாளர் சிஆர் குமார் தலைமை தாங்குகிறார்.

இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்துவதற்கான தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

40 பேர் கொண்ட குழுவில் 30 பேர் கடந்த செவ்வாய்கிழமை பெங்களூர் சென்றடைந்தனர்.மற்றவர்கள் ஜூலை 2 ஆம் தேதி முகாமில் சேருவார்கள்.முகாம் ஜூலை 31ம் தேதி நிறைவடைகிறது.

இந்த மாத தொடக்கத்தில் ஓமானில் நடந்த ஜூனியர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைப்பற்றியது.இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதாக பயிற்சியாளர் குமார் கூறினார். ஆனால் உலகக் கோப்பையில் வெற்றி பெற திறமைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முகாமில் தீவிர பயிற்சிகளுக்கு வீரர்கள் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் வீரர்கள் அவர்களின் திறன்களை புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர் என்று பயிற்சியாளர் குமார் தெரிவித்தார்.

'உலகக் கோப்பை போன்ற சவாலான போட்டியில் சிறந்து விளங்குவது அவசியமானது. அணியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும், வீரர்களின் அணுகுமுறைகளைச் சிறப்பாகச் செய்வதற்கும் எங்கள் முயற்சிகளை அர்ப்பணிப்போம்' என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் செய்திகள்