< Back
ஹாக்கி
ஹாக்கி
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 5-ம் நாள் முடிவுகள்...
|22 Nov 2023 8:46 AM IST
அரியானா அணி சத்தீஷ்காரை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சென்னை,
13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 5-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா 13-1 என்ற கோல் கணக்கில் சத்தீஷ்காரை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்ற ஆட்டங்களில் பஞ்சாப் 4-2 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தையும், உத்தரபிரதேசம் 3-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியையும், ஒடிசா 8-1 என்ற கோல் கணக்கில் டெல்லியையும் வீழ்த்தின. கேரளா-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.