< Back
ஹாக்கி
13-வது தேசிய சீனியர் ஆக்கி: மூன்றாம் நாள் முடிவுகள்...

image courtesy; twitter/@TheHockeyIndia

ஹாக்கி

13-வது தேசிய சீனியர் ஆக்கி: மூன்றாம் நாள் முடிவுகள்...

தினத்தந்தி
|
20 Nov 2023 8:42 AM IST

3-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 13-1 என்ற கோல் கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

3-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 13-1 என்ற கோல் கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. மற்ற ஆட்டங்களில் கர்நாடகா 5-0 என்ற கோல் கணக்கில் டாமன் டையூவையும், அரியானா 22-1 என்ற கோல் கணக்கில் குஜராத்தையும், டெல்லி 6-1 என்ற கோல் கணக்கில் தெலுங்கானாவையும், ஒடிசா அணி 27-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேசத்தையும் பந்தாடின.

மேலும் செய்திகள்