< Back
ஹாக்கி
ஹாக்கி
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 7-ம் நாள் முடிவுகள்...
|24 Nov 2023 2:20 PM IST
பெங்கால்-மணிப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
சென்னை,
13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 7-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பெங்கால்-மணிப்பூர் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு டிரா கண்ட மணிப்பூர் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
மற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேச அணி 10-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரையும் ஜார்கண்ட் 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவையும் சண்டிகார் 6-2 என்ற கோல் கணக்கில் ஆந்திராவையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.