< Back
ஹாக்கி
ஹாக்கி
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 4-ம் நாள் முடிவுகள்...
|21 Nov 2023 12:13 PM IST
13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
4-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 12-1 என்ற கோல் கணக்கில் பீகாரை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் உத்தரகாண்ட் 5-0 என்ற கோல் கணக்கில் திரிபுராவையும், மணிப்பூர் 15-1 என்ற கோல் கணக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியையும், பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தையும், ஆந்திரா 3-1 என்ற கோல் கணக்கில் கோவாவையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.