< Back
கால்பந்து
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

image courtesy; twitter/@FIFAWWC

கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
16 Aug 2023 5:52 PM IST

அரையிறுதி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது அணியாக இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பிரிஸ்பேன்,

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி முதல் அணியாக ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது அணியாக இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் எலா டூன், லாரன் ஹெம்ப் மற்றும் அலெசியா ருஸ்ஸோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் சாம் கெர் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்பெயின் அணியை எதிர் கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சுவீடன் அணி உடன் விளையாட உள்ளது. மூன்றாம் இடத்திற்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன.

மேலும் செய்திகள்