< Back
கால்பந்து
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதியில் ஸ்பெயின்-சுவீடன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதல்...!

Image Courtesy: @FIFAWWC

கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதியில் ஸ்பெயின்-சுவீடன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதல்...!

தினத்தந்தி
|
13 Aug 2023 9:12 AM IST

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

பிரிஸ்பேன்,

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் போட்டி நேரத்தில் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15-ந்தேதி) முதல் அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் ஸ்பெயின்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புதன்கிழமை (16-ந்தேதி) நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டி சனிக்கிழமையும் (19-ந்தேதி), இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (20-ந்தேதி) நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்