< Back
கால்பந்து
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அறிமுக அணியான மொராக்கோவுக்கு முதல் வெற்றி
கால்பந்து

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அறிமுக அணியான மொராக்கோவுக்கு முதல் வெற்றி

தினத்தந்தி
|
31 July 2023 3:46 AM IST

மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் 17-ம் நிலை அணியான தென்கொரியாவை தோற்கடித்தது.

சிட்னி,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

'எச்' பிரிவில் சிட்னியில் நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 72-வது இடம் வகிக்கும் மொராக்கோ 1-0 என்ற கணக்கில் 17-ம் நிலை அணியான தென்கொரியாவை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 6-வது நிமிடத்தில் இப்டிசம் ஜிராய்டி தலையால் முட்டி வலைக்குள் திருப்பினார். அறிமுக அணியான மொராக்கோவுக்கு உலகக் கோப்பை போட்டியில் கிடைத்த முதல் வெற்றியாக இது பதிவானது.

'எச்' பிரிவில் கொலம்பியா 6 புள்ளிகளுடன் (2 வெற்றி) ஏறக்குறைய 2-வது சுற்றை அடைந்து விட்டது. ஜெர்மனி, மொராக்கோ தலா 3 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளன. 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ள தென்கொரியா புள்ளி கணக்கை தொடங்கவில்லை. இந்த பிரிவில் கடைசி லீக்கில் தென்கொரியா - ஜெர்மனி, கொலம்பியா- மொராக்கோ அணிகள் 3-ந்தேதி மோதுகின்றன. இதன் முடிவில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் தெளிவாகும்.

மேலும் செய்திகள்