< Back
கால்பந்து
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல் வெற்றியை பதிவு செய்த சீனா
கால்பந்து

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல் வெற்றியை பதிவு செய்த சீனா

தினத்தந்தி
|
29 July 2023 3:52 AM IST

2-வது ஆட்டத்தில் ஆடிய சீனா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அடிலெய்ட்,

32 அணிகள் இடையிலான பெண்கள் 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 'டி' பிரிவில் அடிலெய்டில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதீயை வென்றது.

சீனா அணியில் ஜாங் ருய் 29-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு 10 வீராங்கனைகளுடன் போராடிய சீனா 74-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கியது.

அந்த அணி வீராங்கனை வாங் ஷூயாங் இந்த கோலை அடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். 2-வது ஆட்டத்தில் ஆடிய சீனா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் சீனா அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

மேலும் செய்திகள்