< Back
கால்பந்து
கால்பந்து போட்டிகளில் இருந்து ஜெர்மனி அணியின் பிரபல வீரர் ஓய்வு

image courtesy:AFP

கால்பந்து

கால்பந்து போட்டிகளில் இருந்து ஜெர்மனி அணியின் பிரபல வீரர் ஓய்வு

தினத்தந்தி
|
6 July 2024 3:28 PM IST

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஜெர்மனி அணி காலிறுதியுடன் வெளியேறியது.

ஸ்டட்கார்ட்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) முடிவில் பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் ஜெர்மனி காலிறுதியில் வெளியேறியதை அடுத்து அந்த அணியின் முன்னணி வீரரான டோனி குரூஸ் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் கூறுகையில்,"என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன், அணியைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, வரும் காலங்களில் அவர்களை டிவியில் பார்ப்பேன்"என்று கூறினார்.

மேலும் செய்திகள்