< Back
கால்பந்து
சூப்பர் கோப்பை கால்பந்து; அரையிறுதியில் ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

image courtesy; twitter/@JamshedpurFC/ @eastbengal_fc

கால்பந்து

சூப்பர் கோப்பை கால்பந்து; அரையிறுதியில் ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
24 Jan 2024 11:33 AM IST

இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்று இருந்தன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் தங்களது பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அதன்படி ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் கலிங்கா மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள 2-வது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மேலும் செய்திகள்