தென்மண்டல பல்கலைக்கழக கால்பந்து: எஸ்.ஆர்.எம். அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!
|தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடந்து வருகிறது.
சென்னை,
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி. (தமிழ்நாடு) அணி 6-1 என்ற கோல் கணக்கில் மீன் மற்றும் கடல்படிப்பு பல்கலைக்கழக (கேரளா) அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு கால்இறுதியில் கோழிக்கோடு பல்கலைக்கழகம் 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது. கோட்டயம் மகாத்மா காந்தி (கேரளா) - புதுச்சேரி அணிகள் இடையிலான ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட்டில் மகாத்மா காந்தி அணி 5-4 என்ற கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தியது.
கேரள பல்கலைக்கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் ஐ.எஸ்.டி.-யை வென்று அரைஇறுதியை உறுதி செய்தது.