< Back
கால்பந்து
தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி இன்று தொடக்கம் - முதலாவது ஆட்டத்தில் இந்தியா-பூடான் மோதல்
கால்பந்து

தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி இன்று தொடக்கம் - முதலாவது ஆட்டத்தில் இந்தியா-பூடான் மோதல்

தினத்தந்தி
|
3 Feb 2023 6:10 AM IST

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியா-பூடான், வங்காளதேசம்-நேபாளம் அணிகள் மோதுகின்றன.

டாக்கா,

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் வங்காளதேசம், இந்தியா, பூடான், நேபாளம் ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதும். லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியா-பூடான், வங்காளதேசம்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் 5-ந் தேதி வங்காளதேசத்தையும், 7-ந் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்