< Back
கால்பந்து
உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா, ஜெர்மனி அணியினர் வருகை
கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா, ஜெர்மனி அணியினர் வருகை

தினத்தந்தி
|
18 Nov 2022 2:09 AM IST

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா, ஜெர்மனி அணியினர் வருகை தந்தனர்.

தோகா,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று காலை கத்தார் தலைநகர் தோகா வந்தடைந்தனர்.

ஏற்கனவே அபுதாபி வந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணியினர் அங்கிருந்து விமானத்தில் தோகா சென்றுள்ளனர். 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா தனது தொடக்க ஆட்டத்தில் சவுதிஅரேபியாவுடன் வருகிற 22-ந்தேதி மோதுகிறது.

இதே போல் முந்தைய நாள் இரவில் மஸ்கட்டில் நடந்த ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மானுவல் நீயர் தலைமையிலான ஜெர்மனி வீரர்களும் நேற்று கத்தார் சென்றனர். 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ந்தேதி ஜப்பானை (இ பிரிவு) எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்