< Back
கால்பந்து
கால்பந்து
சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி தோல்வி
|19 Aug 2024 6:14 AM IST
சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அல் நாசர் - அல் ஹிலால் அணிகள் மோதின.
ரியாத்,
சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.
ஆனால் அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக அல் - ஹிலால் அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. முடிவில் அல் - ஹிலால் 4-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் அல் - நாசர் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.
அல் - ஹிலால் தரப்பில் அலெக்சாண்டர் மித்ரோவிக் 2 கோல்களும், செர்ஜி மிலின்கோவிக் மற்றும் மால்கம் தலா 1 கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.