< Back
கால்பந்து
சவுதி புரோ லீக்; ரொனால்டோ கோல்... புதிய பயிற்சியாளரை வெற்றியுடன் வரவேற்ற அல்-நஸர் அணி

Image Courtesy: AFP

கால்பந்து

சவுதி புரோ லீக்; ரொனால்டோ கோல்... புதிய பயிற்சியாளரை வெற்றியுடன் வரவேற்ற அல்-நஸர் அணி

தினத்தந்தி
|
21 Sept 2024 12:44 PM IST

சவுதி புரோ லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அல்-நஸர் அணி அல்-எத்திபாக் அணியை எதிர்கொண்டது.

தம்மம்,

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவில் உள்ள அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். சவுதி ப்ரோ லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அல்-நஸர் அணி அல்-எத்திபாக் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் சலீம் அல்-நஜ்தி 56-வது நிமிடத்திலும், தலிஸ்கா 70-வது நிமிடத்திலும் கோல் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது.

அல்-நஸர் அணியின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டெபனோ பியோலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் அல்-நஸர் அணியின் முதல் போட்டி இதுவாகும். ஸ்டெபனோ பியோலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் போட்டியிலேயே அல்-நஸர் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை அடுத்து ரொனால்டோ தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்றிரவு (நேற்று) மிகப்பெரிய வெற்றி. ரசிகர்களுக்காக இது என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்