< Back
கால்பந்து
கால்பந்து
ஆஸ்திரேலியா விலகல்: 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துகிறது சவுதிஅரேபியா..!!
|1 Nov 2023 5:06 AM IST
உலகில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இருந்து வருகிறது.
ரியாத்,
உலகில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இருந்து வருகிறது.
இதனிடையே 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடக்கிறது. 2030-ம் ஆண்டு போட்டியை மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் இணைந்து நடத்துகிறது.
இதன் தொடர்ச்சியாக 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா நாடுகள் ஆர்வம் காட்டின.
இந்நிலையில் போட்டிக்கான உரிமத்தை பெறும் முயற்சியில் இருந்து ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் விலகுவதாக நேற்று அறிவித்தது. இதன் மூலம் 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சவுதிஅரேபியா நடத்தப்போவது உறுதியாகி உள்ளது.