< Back
கால்பந்து
கால்பந்து
கால்பந்து பயணத்தில் தனது 870-வது கோலை பதிவு செய்த ரொனால்டோ!
|24 Dec 2023 1:02 PM IST
சவுதி புரோ லீக் தொடரில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அல் நசீர் அணியின் கேப்டனாக உள்ளார்.
ரியாத்,
சவுதி புரோ லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அல் நசீர் அணியின் கேப்டனாக உள்ளார்.
இந்த தொடரில் நேற்று முன்தினம் ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆட்டத்தில் அல் எட்டிபா மற்றும் அல் நசீர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசீர் அணி 3 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அல் நசீர் அணி தரப்பில் அலெக்ஸ் டெல்ஸ், மார்செலோ ப்ரோசோவிக் மற்றும் ரொனால்டோ ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். அல் எட்டிபா அணி தரப்பில் முகமது அல் குவைகிபி 1 கோல் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த கோல் அவரது கால்பந்து பயணத்தில் 870-வது கோலாக பதிவானது.