< Back
கால்பந்து
கால்பந்து
ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தல்... அபா அணியை ஊதித்தள்ளிய அல் நாசர்
|3 April 2024 4:46 PM IST
சவுதி புரோ லீக் தொடரில் ரொனால்டோவின் அல் நாசர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபா அணியை வீழ்த்தியது.
ரியாத்,
சவுதி புரோ லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் - அபா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அல் நாசர் வீரர்கள் ருத்ர தாண்டவமாடி கோல் மழை பொழிந்தனர். அபா அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முழு நேர ஆட்ட முடிவில் அல் நாசர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபா அணியை ஊதித்தள்ளியது.
அல் நாசர் தரப்பில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். மேலும் அந்த அணியில் அப்துல்சிஸ் அல் -அலிவா 2 கோல்களும், சதியோ மேன், அப்துல் மஜீத் மற்றும் அப்துல்ரகுமான் ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.
இதுவரை முடிவடைந்துள்ள போட்டிகளின் முடிவில் அல் நாசர் 62 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அல் ஹிலால் 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.