யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ : 24 மணிநேரத்தில் 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்
|யூடியூபில் விரைவாக 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.
உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ யூடியூப் துறையில் தனது "யு.ஆர்கிறிஸ்டியானோ" என்ற சேனலை நேற்று அறிமுகப்படுத்தினார்.
இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்களை ரொனால்டோ பெற்றார். இந்நிலையில், சேனல் தொடங்கிய 24 மணிநேரத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ரொனால்டோவின் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், யூடியூபில் விரைவாக 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.