< Back
கால்பந்து
பிரீமியர் லீக் கால்பந்து தொடர்: சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி
கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து தொடர்: சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி

தினத்தந்தி
|
20 May 2024 3:55 PM IST

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

லண்டன்,

எதிஹாட் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி - வெஸ்ட் ஹாம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மான்செஸ்டர் வரலாறு படைத்தது.

மான்செஸ்டர் அணி தரப்பில் பில் போடன் 2 கோல்களும், ரோட்ரி ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற உதவினர். வெஸ்ட் ஹாம் அணி தரப்பில் முகமது குடுஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

மேலும் செய்திகள்