< Back
கால்பந்து
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன்..!
கால்பந்து

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன்..!

தினத்தந்தி
|
8 March 2023 1:21 AM IST

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

பாரீஸ்,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் (பி.எஸ்.ஜி) அணிக்காகவும் விளையாடி வருகிறார். பிரான்சில் நடந்து வரும் லிகு 1 லீக் போட்டியில் கடந்த மாதம் நடந்த லில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் போது நெய்மார் வலது கணுக்காலில் காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் கணுக்கால் தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கு ஆபரேஷன் செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்து இருக்கின்றனர். இதையடுத்து அவருக்கு தோகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

இதனால் நெய்மார் மீண்டும் களம் திரும்ப 3-4 மாதங்கள் வரை ஆகலாம் என்று பாரீஸ் ஜெயின்ட் ஜெர்மைன் கிளப் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்