< Back
கால்பந்து
கால்பந்து
நேஷன்ஸ் லீக் கால்பந்து : ஆஸ்திரியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி
|23 Sept 2022 1:22 PM IST
2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
பாரிஸ்,
பாரிஸில் நேற்று நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் - ஆஸ்திரியா அணிகள் மோதின.தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க போராடின.முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
தொடர்நது நடந்த 2வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர்கள் தீவிரத்துடன் விளையாடினர். ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் அந்த அணியின் கைலின் எம்பாப்பே ,65வது நிமிடத்தில் ஒலிவியர், கோல் அடித்தனர்.இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலை பெற்றது.இதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரிய அணி வீரர்கள் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.