< Back
கால்பந்து
2023ம் ஆண்டில் அதிக கோல்...முதலிடம் பிடித்த ரொனால்டோ..!

கோப்புப்படம்

கால்பந்து

2023ம் ஆண்டில் அதிக கோல்...முதலிடம் பிடித்த ரொனால்டோ..!

தினத்தந்தி
|
1 Jan 2024 3:48 AM IST

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல் நேசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

லிஸ்பன்,

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல் நேசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். 2023-ம் ஆண்டில் அவர் தேசிய அணி மற்றும் கிளப்புக்காக சேர்த்து மொத்தம் 54 கோல்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த ஆண்டில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை ரொனால்டோ பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஹாரி கேன், பிரான்சின் கிலியன் எம்பாப்வே ஆகியோர் தலா 52 கோலுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக ரொனால்டோ கூறியதாவது, தனிப்பட்ட முறையிலும், ஒரு அணியாகவும் 2023-ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அல் நேசர் கிளப்புக்காகவும், போர்ச்சுகல் அணிக்காகவும் நிறைய கோல்கள் அடித்து வெற்றிக்கு உதவியிருக்கிறேன். 2024-ம் ஆண்டிலும் இதே போல் நிறைய கோல்கள் அடிக்க முயற்சிப்பேன்'. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்